/ கட்டுரைகள் / டாலர் நகரம்

₹ 190

பக்கம்: 247 ஆயத்த ஆடைகளின் சொர்க்கமாகத் திகழும் திருப்பூர் பற்றிய இந்த, "டாலர் நகரம் நூல், இணைய தளத்தில், "கூகுள் தேடலில் "தேவியர் இல்லம் திருப்பூர் தலைப்பில் நான்கு ஆண்டுகள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்பது, பரவசம் ஊட்டும் அதிசயமாக உள்ளது.ஜோதிஜி, காரைக்குடியிலிருந்து மஞ்சள் பையுடன் எதிர்காலத்தைத் தேடி திருப்பூருக்கு வந்து, 20 ஆண்டுகளில் அதைக் கண்டறிந்து வெற்றி பெற்ற கதையை சுவாரசியமாக எழுதியுள்ளார். இதைப் படிப்பவர், தாமும் உயரத்துடிப்பர். தன், 20 ஆண்டு வியர்வையை எழுதுகோலில் நிரப்பி சுவைபட, உயர்வின் எல்லையை அளந்து தந்துள்ளார்.சில, பன்னாட்டு நிறுவனங்களின் சுயநல ஆசையால், எதிர்கால சமூகமே அழிந்துவிடும் போலிருக்கிறது என்ற அச்சத்தை எழுதுகிறார்.அடிப்படை தொழிலாள வர்க்கத்தின் அறிவற்ற தன்மையால், எய்ட்ஸ் வளர்க்கும் பெருநகரங்களில் கரூர், நாமக்கல் அடுத்து திருப்பூர் இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறது.தொழில் தேடி வந்து, தொழிலாளி ஆகி, பின் உழைத்து உயர்ந்து முதலாளி ஆன, மனிதரின் மனசாட்சி ஓவியம் இந்த நூல்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை