/ கட்டுரைகள் / டீகோட் யுவர் ட்ரீம் கேரியர் – ஆங்கிலம்
டீகோட் யுவர் ட்ரீம் கேரியர் – ஆங்கிலம்
கனவு வாழ்க்கையை புதுமையாக அமைப்பது எப்படி என்ற விதத்தை எளிய ஆங்கிலத்தில் சொல்லும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.வேலை என்பது வருமானத்திற்கு மட்டுமல்ல... மதிப்பு, நம்பிக்கையுடன் அமைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஏற்ற வேலையை தேர்ந்தெடுப்பதில் முதலில் உறுதி வேண்டும். எதில் திறன் இருக்கிறதோ அதை வெளிப்படுத்தும் வேலையில் தான் உச்சம் தொட முடியும் என அறிவுரைத்துள்ளது.பயிற்சி நிறுவனங்களில் எஸ்.டபிள்யு.ஓ.டி., என்ற பண்பை சொல்லித் தருவர். பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் எதிர்ப்புகளை புரிந்தால் தான் வெற்றி பெற முடியும் என விளக்கமாக சொல்லும் நுால்.– சீத்தலைச் சாத்தன்