/ வாழ்க்கை வரலாறு / டெல்லி சுல்தான்கள்
டெல்லி சுல்தான்கள்
இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் துவக்க கால வரலாற்றை கூறும் நுால். கலிபா – கஜினி – கோரி துவங்கி அடிமை வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், சையீத் வம்சம், லோடி வம்சம் என காலவரிசைப்படி பிரித்து வரலாற்று செய்திகள் திரட்டி தரப்பட்டுள்ளன. படையெடுப்புகளின் பின்னணி, வீழ்ச்சி மற்றும் எழுச்சியால் ஏற்பட்ட மாற்றங்கள் அலசலுடன் தரப்பட்டுள்ளன. செய்திகள் பல பரிணாமங்களில் விரிந்துள்ளன. ஆட்சி காலங்களில் இருந்த ஆளுமைகள் குறித்து பல்வேறு தகவல்கள், வரலாற்று குறிப்புகளுடன் உள்ளன. நிர்வாகம் எப்படி நடத்தப்பட்டது, பொருளாதார நிலை எந்த அளவில் இருந்தது என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. மதங்கள் மீது கொண்டிருந்த ஆட்சி அதிகாரத்தின் அணுகுமுறை பற்றியும் விவரிக்கும் நுால். – சிவா




