/ அரசியல் / தேசியமும் திராவிடமும்
தேசியமும் திராவிடமும்
தமிழகத்தில் தேசிய இயக்கத்தை பின்னுக்கு தள்ளி, திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்ற வரலாற்றை பதிவு செய்யும் நுால். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முகமாக, 39 கட்டுரைகள் உள்ளன.இந்தியாவில் விடுதலை இயக்கம் தோன்றி பரவியதுடன் துவங்குகிறது. அதில் தீவிரவாதியாக பங்கேற்ற, வ.உ.சி.,க்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. பின், நீதி கட்சியின் தோற்றம் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகிறது. தொடர்ந்து தமிழகத்தில் இயக்கங்களின் வளர்ச்சி, செயல்பாடு என்று பேசுகிறது. அரசியல் நிலையை, விமர்சனப்பார்வையுடன் வெளிப்படுத்துகிறது. தகவல்கள் மிகத் துல்லியமாக, கடும் உழைப்பில் தரவுகளுடன் தரப்பட்டுள்ள நுால்.– பாவெல்