/ கதைகள் / தர்மஸ்தம்பம்

₹ 200

வித்தியாசமான களங்களில் உயிரூட்டப்பட்ட கதாபாத்திரங் களால் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நேரடியாக பேசிக்கொள்வது போல் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கதை, ‘ஸ்வீட் பன்’ நினைவு பாதையில் பெருகும் சம்பவங்களால் நிறைந்துள்ளது. கால ஓட்டத்தையும் மாற்றத்தையும் ஏற்க மறுப்பதை, இதிகாச கதையுடன் ஒப்பிடுகிறது. லுங்கி கட்டியவரிடம் கிடைத்த பரிவு, போலியா போதிப்பின் வலி என எளியோரை மனதில் நிறைக்கிறது. இறுதியாக உள்ள, ‘தர்மஸ்தம்பம்’ கதை முற்றிலும் வித்தியாசமானது. மக்களாட்சி நடை முறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை சுட்டிக்காட்டுகிறது. எளிய பெண்ணின் மன உறுதியை விமர்சித்து கற்பனையான தீர்வை முன்வைக்கிறது. வித்தியாசமான கோணங்களில் அமைந்த, 24 கதைகளின் தொகுப்பு நுால். – நிகி


முக்கிய வீடியோ