/ ஆன்மிகம் / தெய்வீகத்தமிழும் வேதஞானமும்

₹ 280

தெய்வீக அனுபவத்துக்கும், வேத அறிவுக்கும் இடையே ஆழமான தத்துவ விவாதத்தை வழங்கும் நுால். தெய்வீகத்தின் உணர்வு, வேதஞானம், உள்ளுணர்வு, சுய பரிந்துரை போன்ற தலைப்புகளை உள்ளடக்கியது. யோகா, சுயமரியாதை உணர்வு பற்றிய குறிப்புகள் உள்ளன. ஷோபன்ஹவர் போன்ற மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்துகளும் அலசப்பட்டுள்ளன. யோகா தின நிகழ்வுகள் மற்றும் கேள்வி கள் வழியாக ஆன்மிக பயிற்சிகள் விளக்கப்பட்டுள்ளன. தெய்வீகம் மற்றும் ஞானம் இடையே உள்ள வேறுபாடுகளை தெளிவாக விவாதிக்கிறது. பல்வேறு கேள்விகள் வழியாக சிந்தனையை துாண்டி விடுகிறது. உள்ளுணர்வு சார்ந்த பயிற்சிகளை பயனுள்ளதாக அமைக்க உதவுகிறது. தமிழ் வாசகர்கள் பொருள் புரிந்து அணுக ஏற்ற வகையில் உள்ளது. ஆன்மிகத் தேடல்களை பூர்த்தி செய்ய ஏற்றது. யோகா பிரியர்களுக்கு உகந்தது. வேத கருத்துகள் தமிழ் இலக்கியத்தில் வேரூன்றி இருப்பது சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. உலக வரலாற்று ஆய்வாளர் டாய்ன்பீயின் எழுதிய, ‘எ ஸ்டடி ஆப் கிஸ்டரி’ போன்ற நுால் கருத்துகள் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. சமூகங்களின் எழுச்சி-, அழிவு சுழற்சிகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. குடும்பம், பணம், உறவுகள், கடமை உணர்வு, இயற்கை உறவு போன்ற தலைப்புகளில் சிந்திக்கத் துாண்டுகிறது. வாழ்க்கை குறித்து உலகம் எப்படி உருவானது... சமூகம் ஏன் அழிகிறது... போன்ற கேள்விகளை எழுப்பி ஆராய்கிறது. அறிவை பகிர வேண்டும் என்ற நோக்கம் தெளிவுபடுத்துகிறது. வரலாறு-, தத்துவத்தை இணைத்து புதிய பார்வையை அளிக்கிறது. சமூக மாற்றம், குடும்ப அழிவு போன்ற சிக்கல்களை பழங்கால உதாரணங் களுடன் இணைக்கிறது. வரலாற்று அறிவையும், வாழ்க்கை தத்துவத்தையும் விரும்புவோருக்கு ஏற்ற நுால். -– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை