/ வாழ்க்கை வரலாறு / டாக்டர் அம்பேத்கர் (பாகம் – 2)
டாக்டர் அம்பேத்கர் (பாகம் – 2)
சமூக சமத்துவம் குறித்த பார்வையை முன்வைக்கும் நுால். சமத்துவத்தை அங்கீகரிக்கும் அமைப்புகள் பற்றிய அலசலுடன் துவங்குகிறது. தொடர்ந்து, மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு என்ற பகுதி உள்ளது. தீண்டாமை குறித்து அலசி ஆராய்கிறது. தாழ்த்தப்பட்டோர் பட்டியலை ஆங்கிலத்தில் உள்ளபடி தருகிறது. தீண்டாமையின் தோற்றம் பற்றி ஆராய்ந்து கூறுகிறது. அது தோன்றிய காலத்தை எடுத்துரைக்கிறது. பாகுபாடான செயல்கள் அனைத்தையும் தெள்ளத் தெளிவுடன் அம்பலப்படுத்துகிறது. அம்பேத்கர் வாழ்வில் முக்கிய நிகழ்வுகளின் படங்கள் தரப்பட்டுள்ளன. ஜாதி பிரிவினைக்கு எதிராக அம்பேத்கர் நடத்திய போராட்டங்களையும் தொகுத்து தரும் நுால். – முகிலை ராசபாண்டியன்




