/ அரசியல் / எனது அரசியல் பயணம்

₹ 500

அரசியல் பிரபலங்களுடன் ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு நுால். துரைமுருகன், இல.கணேசன், குமரி அனந்தன், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவன் என பலரின் முழுநேர அரசியல் பற்றி பகிரப்பட்டுள்ளன. திருநெல்வேலி, எம்.டி.டி., இந்து கல்லுாரியில் நல்லகண்ணு படித்தது, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியதை தெரிவிக்கிறது. விருதுநகர் தொகுதியில் காமராஜருக்கு எதிராக நடந்த பிரசாரம் குறித்த தகவல்கள் உள்ளன. அரசியல், சினிமா துறைகளில் ஆர்.எம்.வீரப்பன் பற்றி குறிப்பிடுகிறது. இளைஞர் காங்கிரஸ் தலைவராக குமரி அனந்தன் செயல்பாடும், நிகழ்ச்சிகளும் தொகுத்து தரப்பட்டுள்ளன. அரசியல் நிகழ்வுகள் பலவற்றையும் அனுபவம் வாயிலாக தொகுத்து தரும் நுால். – முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை