/ கதைகள் / ஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
ஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
மனித மனங்களின் பல்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் கதை அமைப்பதில், சுப்ரஜாவுக்கு தனி இடம் உண்டு.இந்நுாலில் இடம்பெற்ற அனைத்து கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில், மனித மனங்களை படம் பிடித்து காட்டுகிறது. இதிலுள்ள கதைகளை படித்து, மனதில் இருத்தினால், பல்வேறு விதமான மனிதர்களை எதிர்நோக்கும், சமாளிக்கும் தைரியம் வந்து விடும் என்பது நிச்சயம்.தரமான தாள், தெளிவான அச்சு, எளிய நடை மற்றும் கதாபாத்திரங்களாக ஒன்றிரண்டு பேர் மட்டுமே என்று சிறுகதைக்குரிய இலக்கணத்தை மீறாமல் அமைந்திருப்பது சிறப்பு.பிரபல எழுத்தாளர் சுஜாதா, இவருக்கு எழுதிய கடித வாசகத்துடன் ஆரம்பித்து, இறுதியில், சிறுகதை எழுத்தாளராக தடம் பதிக்க எதிர்கொண்ட சவால்களை கூறி முடித்திருப்பது புது உத்தி.சிறுகதை விரும்பிகளுக்கு இந்நுால், முழு திருப்தியை தரும்.– என்.எஸ்.,