/ ஆன்மிகம் / ஐயைந்து மகான்கள் பாகம் – 4

₹ 350

அருளாளர்களான திருமூலர், இடைக்காட்டுச் சித்தர், கடைப்பிள்ளை சித்தர், புண்ணாக்கீசர், ஸ்வாமி ரவி தாஸ், அன்னமாச்சாரியார், ஒடுக்கத்துார் மகான் உட்பட, 25 பேர் வரலாற்றையும் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால். அவர்களின் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. திருமூலரின் திருமந்திரத்தில் ஒன்பது தந்திரங்கள், இடைக்காட்டுச் சித்தரின் பாடல்கள், கடைப்பிள்ளைச் சித்தர் அருளிய மவுன தீட்சை, புண்ணாக்கு சித்தரின் பாடல்கள், சுந்தரானந்தா அருளிய வாத சூஸ்திரம், புலஸ்தியர் தேரையருக்குக் கூறியது, மகரிஷி சுஸ்ருதரின் அறுவை சிகிச்சை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள், குகை நமச்சிவாயர், பாஸ்கர ராயர் படைப்புகள் குறித்தும் ஸ்ரீசத்ய சாய்பாபா தியானம் பற்றி கூறியதும் இடம் பெற்றுள்ளன. ஆன்மிக அன்பர்கள் விரும்பும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை