/ ஆன்மிகம் / குரு குண ஸ்தவனம்

₹ 200

மகான் ஸ்ரீராகவேந்திரரின் பெருமையையும், கருணையையும் எடுத்துரைக்கும் நுால். சிக்கலான, தத்துவார்த்தமான செய்திகளையும், சாதாரணர்களும் படித்து பயன் பெறும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது. படிக்காத பாமரன் வெங் கண்ணா, திவானாக உயர்ந்தது எப்படி என்பது, பகவான் ராகவேந்திரரின் கருணைக்கு சாட்சியாய் விளங்குகிறது. ராகவேந்திரரை சோதித்த மன்னனுக்கு, எத்தகைய இறை அனுபவம் ஏற்பட்டது என்பது சுவைபட சொல்லப்பட்டுள்ளது. திவான் வெங்கண்ணா கட்டிய பிருந்தாவனத்தில் சுவாமிகள் குடிகொள்ள மறுத்த காரணம் வியப்பை ஏற்படுத்துகிறது. பிருந்தாவனத்தின் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. எளிய நடையில், ஆர்வத்தை துாண்டும் வகையிலமைந்த நுால். – டாக்டர் கார்முகிலோன்