/ தீபாவளி மலர் / ஞான நிறைமலரே வள்ளலார்

₹ 200

வள்ளலார் ராமலிங்க அடிகள் வரலாற்றை, நாடக வடிவில் தரும் இனிய நுால். கடவுள் ஒருவரே, சாதி, மத வேறுபாடுகள் வேண்டாம். எல்லா உயிரையும் நேசிக்கும் ஆன்மநேயம் கொள்க, பசி தவிர்த்தல் போன்றவை எழுத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளன.‘பசி போக்கி உணவளித்த உத்தமிக்கு, உலகின் பசி போக்கும் உத்தம மகன் பிறப்பான்’ போன்ற வரம் அளிக்கும் வசனங்கள் மனதில் பதிகின்றன. உலகின் துயரம் போக்க வந்த வள்ளலார், குழந்தையாய் தொட்டிலில் இருந்தபோது, தாலாட்டு பாடியும் துாங்கவில்லை என, மனதில் பதியும்படி காட்சி அமைந்துள்ளது.ஞான சபை உபதேசமும், ஏழு திரை நீக்கிய தரிசனமும் அழகிய காட்சிகளாய் கண்முன் விரிவது போல் காட்டுகிறது. நடிப்பதற்கும், படிப்பதற்கும் ஏற்ற நுால்.– முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை