/ பொது / ஞானாபரணம்
ஞானாபரணம்
வாழ்க்கையில் உயர்வதற்காக, ஞானியர், அறிஞர்கள் வழங்கிய அறப்பொன்மொழிகளின் தொகுப்பு நுால். வாழ்க்கையை அறத்துடன் அமைத்துக் கொள்ள உதவும் உயர் தனி அறமொழிகளால் அமைந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் கூறும், ‘நீ தனிமையில் இருக்கும் போது என்ன தோன்றுகிறதோ, அதுதான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கும்’ என்ற பொன்மொழியுடன் துவங்குகிறது.அருட்பெருஞ்ஜோதி வள்ளலார், கவிஞர் உமர் கய்யாம், புத்தகுரு ஜூவங்கி என உலகம் முழுதும் தோன்றி அறக்கருத்துகளை விதைத்த, ஞானியர், அறிஞர்கள், குருக்களின் அனுபவ மொழிகளை உள்ளடக்கியுள்ளது. வாழ்வில் தளர்ச்சி அடையும் போது, நம்பிக்கை ஊட்டும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.– ஒளி