/ வரலாறு / ஹர்ஷர்
ஹர்ஷர்
கி.பி., 606 முதல் 41 ஆண்டுகள், ஆட்சி செலுத்தியவர் ஹர்ஷர். * ரத்னாவளி, பிரியதர்சிகா, நாகானந்தம் என்ற முப்பெரும் இலக்கியங்களை எழுதியதால், ஹர்ஷரின் புலமை விளங்கும்.* இவரது ஆட்சியில், நிலவரி நீக்கப்பட்டது.* பெற்றோரை வணங்க தவறினால் அது குற்றம் என அறிவிக்கப்பட்டு, அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.* உயிர் கொலை தடை செய்யப்பட்டு, புலால் உண்ணுவதற்கு தண்டனை தரப்பட்டது.* மது, சூது, புலால், ஆகியவை மன்னிக்க முடியாத குற்றமாக்கப்பட்டு, தண்டனைகள் வழங்கப்பட்டன.* மருந்து, உணவு, நீர், உடை ஆகியவற்றை எல்லா மதப்பிரிவினருக்கும் அளித்தார்.இவை எல்லாம், சீனப் பயணி, யுவான் சுவாங், ஹர்ஷர் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் கூறியுள்ளவை. நேபாளம், இவரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததாக இந்த நூலில் கூறப்படும் வரலாற்று செய்தி, வியப்பு அளிக்கிறது.முனைவர் மா.கி.ரமணன்