/ மருத்துவம் / ஆரோக்கியம் தரும் உணவு, உடற்பயிற்சி முறைகள்
ஆரோக்கியம் தரும் உணவு, உடற்பயிற்சி முறைகள்
ஆரோக்கியமாக வாழ வழிமுறையை எடுத்துரைக்கும் நுால். இஷ்டம் போல் சாப்பிட்டு எடை அதிகரித்தால் மிதமிஞ்சிய கொழுப்பு சேரும். அது சிரமத்தை ஏற்படுத்தும் என அறிவுறுத்துகிறது. உணவு முறை, எடை குறைப்பு யோசனை, உடற்பயிற்சி முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. கடும் பயிற்சியால் உடலை வருத்தினால் பலன் நேர்மாறாகிவிடும் என எச்சரிக்கிறது. கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்ணின் கருப்பை இயக்கம் பாதிக்க வாய்ப்புண்டு என்கிறது. சமச்சீர் உணவின் சிறப்பை விவரிக்கிறது. குறைவான கலோரியுள்ள உணவு, காய்கறி, பழங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கூறும் நுால். – புலவர் சு.மதியழகன்




