/ மருத்துவம் / முதுமையைத் துரத்தும் மூலிகை, யோகா, மருத்துவம்
முதுமையைத் துரத்தும் மூலிகை, யோகா, மருத்துவம்
பயிற்சி, முயற்சியால் முதுமையை தள்ளிப்போட முடியும் என நம்பிக்கையூட்டும் நுால். தக்க சான்றுகள் வழியாக விளக்குகிறது. ஆராய்ச்சி கட்டுரை போல் ஏராளமான தகவல்கள் குவிந்துள்ளன. மனிதர்களின் சராசரி ஆயுள் உயர்ந்துள்ளதை அறிய தருகிறது. முதுமையிலிருந்து மீண்டும் இளமைக்கு திரும்ப முடியும் என்ற செய்தியை சொல்கிறது. தகவல்கள் முதியோருக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும் வகையில் உள்ளது. முதுமை ஒரு சாதாரண நோயைப் போன்றது. அதை எளிதாக முழுதாக குணப்படுத்த முடியும் என்கிறது. நோய் விரட்டும் மூலிகை மருத்துவம் பற்றிய கட்டுரை அதிசயிக்க வைக்கிறது. வாசித்து, யோசித்து செயல்பட வேண்டிய வாழ்க்கை கையேடு நுால். – டாக்டர் கார்முகிலோன்




