/ பயண கட்டுரை / தமிழ் மொழியின் வரலாற்றுப் பயணம்
தமிழ் மொழியின் வரலாற்றுப் பயணம்
வரலாற்றில் தமிழ் மொழி அடைந்து உள்ள மாற்றங்களை பதிவு செய்யும் நுால். வளர்ச்சியின் பாதையை தகுந்த ஆதாரங்களுடன் முன் வைக்கிறது. தமிழ் மொழியின் வரலாறும், செம்மொழி தமிழும், ஒலி விதிகளும் அவை ஏற்படுத்தும் மாற்றங்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. உருபு மாற்றம், வினை அமைப்பு, மாற்றத்திற்கான காரணங்கள், இலக்கியத்தில் தமிழ் மொழி, தமிழர் வரலாறு என்ற தலைப்புகளில் ஆய்வுத் தகவல்கள் பகுத்து தரப்பட்டுள்ளன.ஒவ்வொரு தலைப்பும் தகுந்த ஆதாரங்களுடன் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது. வட்டார மொழி பேச்சு, நடைமுறையில் உள்ள மூலச்சொற்களை உரிய ஆதாரங்களுடன் தருகிறது. எழுத்தாளர்கள், கல்வியாளர்களுக்கு உதவும் நுால்.– மதி