/ வரலாறு / ஹிஸ்டரி ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் ஆர்கனைசேஷன்ஸ் இன் மெட்ராஸ்
ஹிஸ்டரி ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் ஆர்கனைசேஷன்ஸ் இன் மெட்ராஸ்
பத்திரிகையாளர் சங்கங்களைப் பற்றிய ஆங்கில தொகுப்பு நுால். அச்சு ஊடகம் தென் மாநிலங்களில் துவங்கிய வரலாற்றை விவரிக்கிறது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்காலத்தில் பத்திரிகைகள் மீதான தடைகள், மறுப்புகள் சான்றுகளோடு தரப்பட்டுள்ளன. தேசிய, மாநில பத்திரிகையாளர் சங்கங்கள் ஏற்பட காரணங்கள், ஊழியர் ஊதியப் பிரச்னைகளுக்கு தீர்வுகளை எடுத்துக் கூறியுள்ளது. சென்னை பத்திரிகையாளர் சங்கங்களின் செயல்பாடுகள், போராட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஊழியர் நலன்கள் தொடர்பான வழக்குகளின் தீர்வுகள், மேல்முறையீடுகள் பற்றிய தகவல்கள் நிரல்படத் தரப்பட்டுள்ளன. – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு