/ கதைகள் / ஹிதேரா

₹ 350

மனித பரிணாம வளர்ச்சி கருத்துகளை உள்ளடக்கிய நாவல் நுால். மனித இனத்தின் ஆகச்சிறந்த வலிமை, அதிமுக்கிய பலவீனத்துக்கு இடையே நடக்கும் போராட்டத்தை சுட்டிக் காட்டுகிறது. கடவுள் வாழும் தேசத்தை விவரிப்பதே கதையின் மையக்கருத்து. வாழ்வில் நம்பிக்கை பொய்த்து போகும் காலத்தில் உதவக்கூடியது எது, உண்மையான ஆற்றல் யாரிடம் இருக்கிறது, அதை இயக்குவது யார் என கேள்விகளை முன்வைக்கிறது. மத நம்பிக்கை சாமானியருக்கு சத்தியமாகவும், ஞானிக்கு பொய்யாகவும், அதிகாரத்துக்கு பயனுள்ள தாகவும் இருப்பதாக விரியும் வாசகம் யோசிக்கச் செய்கிறது. நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. மனித இனத்தின் முடிவற்ற தேடல் பயணத்தில் யாராக இருக்க விழைகிறோம் என்பதை உணர்த்தும் வகையிலான நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை