/ மாணவருக்காக / இதயம்
இதயம்
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2, (பக்கம்: 112)."இதயம் என்ற உடனேயே "டாக்டர் செரியன் பெயரும் உடனுக்குடன் நினைவில் வரக் காரணம், அவர் இதய நோய்களை நன்கு அறிந்தவர்., புரிந்தவர். மேலும் நோயாளிகளை நேசிப்பவர். கேள்வி - பதில் பாணியில் அமைந்துள்ள நூல். அம்புக்குறியை யொத்த கூரான கேள்விகளும், ஐயங்களும் ஏதும் எழாத வண்ணம், தெளிவான இயல்பான டாக்டரின் பதில்களும், படிக்கும் போது மருத்துவக் கல்லூரியில் விரிவுரைகள் வழங்கப்படுவதையொத்ததோர் பிரமிப்பு மேலோங்குகிறது. கருவில் இருக்கும் குழந்தைக்கு முதன் முதலில் இதயம் தான் உருவாகும். மற்ற உறுப்புகள் பின்னரே உருவாகும். (பக்: 48) இந்நூலில்... "கண் திருஷ்டி போன்று நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் (கொழுப்பு) பற்றிய தகவல்கள் சற்று குழப்பம் அடையச் செய்கின்றன... திருத்தப்பட வேண்டும் (பக்:94, 100).