/ கட்டுரைகள் / இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம்

₹ 150

சிவப்பு விளக்கிட்டு கதவுகள் மூடப்பட்டும் தண்டவாளம் கடக்கிறது பட்டாம்பூச்சி எனும் முதல் கவிதை கட்டுப்பாடுகள் பட்டாம்பூச்சியை தடுத்துநிறுத்த முடியாது என்ற உண்மையை உரக்கச்சொல்கிறது. தார்ச்சாலையில் வண்ண சாக்பீஸ்களால் வரையப்பட்ட கடவுள்கள் பெருமழையில் நகர்ந்து ஒதுங்குகிறார்கள், மீன் வாங்கியப்பின் மீதம் பெறும் பணத்தில் எல்லா மீன்களின் வாசமும் துள்ளுகிறது போன்ற ஆழமான கவிதைகளே இந்நுாலின் தரத்திற்கு சாட்சி. நீயுன் நீள் கூந்தலில் நடு வகிடெடுக்கிறாய் குளத்தில் பறவையொன்று தாழப்பறந்து தனதலகால் கோடிழுத்துக் கொண்டே பறக்கிறது எனும் கவிதையை ஆசிரியர் எப்படி சிந்தித்தார் என வியப்பாக உள்ளது. அழகிய கவிதைகளை, சமூக அக்கறையுடன் பரிமாறியிருக்கிறார் ம.விஜய். – ரெங்கா


சமீபத்திய செய்தி