/ வாழ்க்கை வரலாறு / இந்தியாவின் சமாதான சிற்பி: லால்பகதுார் சாஸ்திரி
இந்தியாவின் சமாதான சிற்பி: லால்பகதுார் சாஸ்திரி
முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரியின் வாழ்க்கையை சுருக்கமாக தரும் நுால். படகு கட்டணம் செலுத்த இயலாமல் நதியை நீந்தி கடந்து பள்ளி சென்றது குறித்த தகவல் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. காந்திஜி மீதான ஈர்ப்பால் உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது பதிவிடப் பட்டுள்ளது. சிறையில் புத்தகங்கள் படித்து உயர்ந்ததை குறிப்பிடுகிறது. இந்தியாவை உயர்த்த பசுமை புரட்சி, வெண்மை புரட்சி திட்டங்களை போட்ட வரலாறும் தரப்பட்டு உள்ளது. இந்திய அரசியலில் சாஸ்திரியின் சாதனை நிகழ்வுகளும் கூறப்பட்டுள்ளன. எளிமையாக அமைந்த வாழ்க்கை வரலாற்று நுால். – புலவர் சு.மதியழகன்




