இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்திற்கு பிறகு
நம் நாடு சுதந்திரம் பெற்று, அறுபது ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டன. அதன் அரசியல் வரலாற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அரசியல் களங்களில் உள்ள அதிரடித் திருப்பங்கள் உட்பட தலைவர்கள், கட்சிகள், அதன் கொள்கை மாற்றங்கள் என, பன்முக பார்வை இதில் அடக்கம்.அந்தப் பார்வையில், ஆங்கிலத்தில் இந்த நூலை ஆக்கிய கிருஷ்ணா அனந்த், கடந்த கால நிகழ்வுகளை, ஆற்றொழுக்காக பதிவு செய்திருக்கிறார்.தமிழில் அந்த உணர்வு, அப்படியே பதிவாகி இருக்கிறது என்பது இந்த நூலின் சிறப்பாகும்.இந்திரா காந்தி பிரதமராக வந்ததும், அவருக்கு உதவியாக இருந்த மோகன் குமாரமங்கலம் கூறிய, மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, "திருத்த முடியாத புனிதமாகஅரசியல் அமைப்புச் சட்டத்தைக் கருதக் கூடாது என்று வலியுறுத்தியதை (பக்கம் 109)ல் காணலாம். ஜெயப்பிரகாஷ் நாராயணன் முழுப்புரட்சியை, காவல் துறையின் இரும்புக் கரங்களால் இந்திரா அடக்கியது, அதற்கு பின் நடந்த வரலாற்று திருப்பங்கள் தொடர்ச்சியாக பதிவாகி உள்ளன.பாண்டியன்




