/ வாழ்க்கை வரலாறு / இந்திய அறிவியல் அறிஞர்கள்
இந்திய அறிவியல் அறிஞர்கள்
அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அரிய கண்டுபிடிப்புகளை தொகுத்து தந்துள்ள நுால். ரேடியோவை கண்டறிந்ததாக புகழப்படும் மார்கோனிக்கு முன்னோடியாக, ஜெகதீஷ் சந்திர போஸ் பொதுவெளியில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டது பற்றி விவரிக்கிறது. ஆங்கிலேயருக்கு இணையான ஊதியம் வழங்கப்படாததால் பணி மறுத்தது குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. போஸ் அடைந்த அவமானம், வலியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கணித மேதை ராமானுஜன், நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர வெங்கட்ராமன், ஜானகி அம்மாள், எலவர்த்தி நாயுடம்மா, பேராசிரியர் ஜி.என்.ராமச்சந்திரன் உட்பட, 18 அறிஞர்கள் பற்றி கூறப்பட்டுள்ள நுால். -– புலவர் சு.மதியழகன்