/ வரலாறு / இந்தியச் சரித்திரத்தின் இமாலயத் தவறுகள்
இந்தியச் சரித்திரத்தின் இமாலயத் தவறுகள்
இந்திய வரலாறு குறித்து தனிப்பட்ட கருத்தோட்டங்களை முன்வைக்கும் நுால். இந்திய விடுதலை சார்ந்த வரலாற்று நிகழ்வுகளை மீள்பார்வை செய்கிறது. அக்பர், திப்பு சுல்தான் போன்ற இஸ்லாமியர் ஆட்சி காலத்தை அலசுகிறது. அப்போதைய சமூக நடப்புகள் பற்றி கடும் விமர்சனங்களை முன்வைக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் எதிராக இருந்த கோட்பாடுகளை சுட்டிக் காட்டுகிறது. இஸ்லாமிய படையெடுப்புகளுக்கு பின், சமயப்பூசல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றில் இடம்பெற்ற பல்வேறு முரண்பதிவுகள் ஐரோப்பியரால் கட்டமைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டுகிறது. மாக்ஸ்முல்லர், மெக்காலே கருத்துகளையும் எதிர்க்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




