இந்த விநாடி
வள்ளல் பதிப்பகம், மலர் மதி இல்லம், (பெரியார் சிலை பெட்ரோல் பங்க் பின்புறம்) காரைக்குடி. போன்: 94434 92733 (பக்கம்: 192 ) முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள நாகூர் ரூமி, கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். நூலாசிரியர் எனக் குறிப்பிடுவதை விட, நிறைய நூல்களைப் படிப்பதில் ஆர்வமுள்ளவர்; படித்ததை அசை போட்டு நன்கு யோசித்தபின், எழுத உட்கார வேண்டும் என்ற கொள்கையுடையவர் எனக் குறிப்பிடுவது தான் பொருத்தமானதாக இருக்கும். நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள நடிகர் ராஜேஷ் குறிப்பிட்டுள்ளது போல், இது மிகவும் வித்யாசமான புத்தகம். சுய முன்னேற்ற வரிசை என, ஒரு பதப்பிரயோகம் பதிப்பக உ<லகில் உண்டு. இது சுய உள்ளுணர்வை மேன்மைப்படுத்தும் வரிசைப் புத்தகம் என்று சொல்லவேண்டும். படிக்கும் போதே நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். ஏராளமான, பயனுள்ள தகவல்கள் இந்தப் புத்தகத்தில் கொட்டிக்கிடக்கின்றன. எட்டு கட்டுரைகள் என்றாலும், "யுடர்ன் அடியுங்கள், "ஈகோ, போன்ற 80 கட்டுரைகளுக்குச் சமம். நல்ல புத்தகம். நாகூர் ரூமி தமிழக இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி.