/ கதைகள் / தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறு கதைகள்

₹ 110

இறையன்புவின் சிறந்த பல சிறுகதைகள் அடங்கிய தொகுதி. அறச்சீற்றமும், சிறுமை கண்டு பொங்குகிற மனதின் ஆவேசமும் இந்தத் தொகுப்பில் உள்ள புனைக் கதைகளின் வழியாக வெளிப்படுகின்றன.‘என்னுடைய சிறுகதைகளைப் பெரும்பாலும் சமூக நிகழ்வுகளைக் கொண்டே நான் கட்டமைக்க முடிந்தது. விளிம்பு நிலை மனிதர்களை என் களப் பணியில் அதிகம் நேசித்தேன். அவர்களுக்கு என் மீது பிரியம். மீனவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்காக அரசுத் திட்டங்களை சேர்ப்பதோடு நிறுத்தாமல், அதைத் தாண்டி நேசமாகப் பழகினேன். அவை சிறுகதைகள் எழுதவும், நாவல் எழுதவும் எனக்குத் துாண்டுதலாக இருந்தன...’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் இறையன்பு.‘நின்னினும் நல்லவன்’ என்னும் கதை மனிதர்களுக்குள் இருக்கும் மகத்தான பண்புகளைப் பேசுகிறது.‘உங்கள் நாயகர்கள் மாசு மருவில்லாமல் இருக்கின்றனரே, எதார்த்தத்தில் இது சாத்தியமா?’ என்று இறையன்புவை கேட்டபோது, ‘அப்படிப்பட்டவர்களை நான் சந்தித்து இருக்கிறேன்’ என்று பதில் சொன்னார் கதாசிரியர் இறையன்பு.‘நேர்மை’ என்கிற சிறுகதை, சாமானியர்களிடமும் இருக்கும் நேர்மையைச் சுட்டுகிறது.வித்தியாசமான ஆளுமைகளை கொண்ட மனதில் நிலைத்த மனிதர்களை சித்தரிக்கும் இந்த நுால், ஒரு சிறுகதை பொக்கிஷம்!– எஸ்.குரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை