/ கவிதைகள் / இரண்டு

₹ 110

பண்பாடு, அரசியல் காதல், இயற்கை, பொருளியல், அறிவியல், வேளாண்மை, மனித மாண்பு, சமத்துவம், ஆன்மிகம், பகுத்தறிவு என, பல்வேறு பொருட்களை உள்ளடக்கிய கவிதைகளின் தொகுப்பு நுால். ஹைக்கூ கவிதை என்றாலும் மரபுக்குரிய இயைபு தொடைகளும், எதுகை மோனையும், சந்த நயம் மிகுந்த சொற்கட்டுகளாய் அமைந்துள்ளன. சுவாரசியம் தரும் வகையில், ‘நிழலாய் பயணிப்பது சுற்றக்கருணை, நாளாய் அமைவது அருங்கருணை, பேராய் நிலைப்பது செயல்கருணை’ என பாடுகிறது. சந்தம் இனிக்க, ‘தாயின் ஆணை அன்பகம், தந்தையின் ஆணை உயர்வகம், ஆசிரியர் ஆணை அறிவகம், நண்பனின் ஆணை நம்பகம்’ என புனையப்பட்டு உள்ளது. தனியுடைமையை எதிர்த்து, மானுட மாண்பை போற்றும் வகையில் கருத்துச் சிதறல்களாய் அமைந்துள்ள நுால்.– புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ