/ வாழ்க்கை வரலாறு / இசை அரசி பி.சுசீலா

₹ 450

திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவின் வாழ்க்கை வரலாறு தொகுப்பு நுால். ஆந்திர மாநிலம். விஜயநகரத்தில் பிறந்த தகவலுடன், வாழ்க்கை நிகழ்வுகள், இசை பயிற்சி பற்றியும் தெரிவிக்கிறது. சென்னையில் திரைப்பட பின்னணிப் பாடகியானது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. கோடீஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடிகை பத்மினிக்காக முதன்முதலில் குரல் கொடுத்ததை குறிப்பிடுகிறது. அமரதீபம் படத்தில் பாடிய விபரத்தையும் தெரிவிக்கிறது. விஜயநகரத்தைச் சேர்ந்த டாக்டர் ராம் மோகன் ராவை காதலித்து திருமணம் செய்தது குறித்த தகவலையும் தருகிறது. தகவல் களஞ்சியமாக உள்ளது. ஒவ்வொரு அத்தியாய துவக்கத்திலும் அறிஞர் பொன்மொழி தரப்பட்டுள்ளது. படிக்கும்போது இனிமை தரும் நுால். -– முகிலை ராசபாண்டியன்


முக்கிய வீடியோ