/ கதைகள் / இது ஒரு பூர்வ ஜென்ம பந்தம்
இது ஒரு பூர்வ ஜென்ம பந்தம்
பெண்களின் மன உணர்வுகளை சொல்லும் கதை தொகுப்பு நுால். காதலித்தவனை மறக்க முடியாத மிகவும் தைரியமான பெண். கல்லுாரி பருவ காதலை கணவன், மகளிடம் சொல்லும் மனப்பக்குவம் பெற்றதை சித்தரிக்கிறது. அடுத்தது, ‘பி.காம்., சீட் வேண்டும்’ என்ற நாவலில் மூன்று பெண்களை வெவ்வேறு கோணத்தில் அறிமுகப்படுத்துகிறது. ஜாதி, மதம் கடந்து திருமணம் புரிந்த பெண், கணவன் இறந்த பின் சந்திக்கும் பிரச்னை, பின்விளைவுகளை சமாளிப்பதை அலசுகிறது.சிங்கப்பூர் சுகவாசி, பண்டிட்டை மணக்க நேருகிறது. ஆண்மை இல்லை என தெரிந்ததால் தவறிழைப்பது பற்றி விவாதிக்கிறது. பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக இருப்பது சிறப்பு சேர்க்கிறது. வித்தியாசமான கதைக்களமுடைய நுால்.– சீத்தலைச்சாத்தன்