/ வரலாறு / ஜெய்ஹிந்த் செண்பகராமன்
ஜெய்ஹிந்த் செண்பகராமன்
இந்திய விடுதலைக்காக போராடிய செண்பகராமனின் வாழ்வை விவரிக்கும் நுால். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை கதிகலங்க வைக்க, சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடந்த குண்டு வீச்சில், ஜெர்மானிய, ‘எம்டன்’ கப்பலின் துணை கமாண்டராக இருந்தவர். இந்திய விடுதலை போரில் பெரும் பங்காற்றியவர். ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை உருவாக்கி, சுபாஸ் சந்திரபோசின் நம்பிக்கையை பெற்றவர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வாழ்ந்து, உலகம் முழுதும் பயணம் செய்து, ஆயுத புரட்சி மூலமே இந்திய விடுதலை சாத்தியம் என்று முழங்கியவர்.சர்வாதிகாரி ஹிட்லர் கருத்துக்கு, தைரியமாக மறுப்பு தெரிவித்தவராக விளங்கியவர் செண்பகராமன். இவர் குறித்து அறிய உதவும் நுால்.– டி.எஸ்.ராயன்