/ கவிதைகள் / காற்றில் தவழும் கண்ணதாசன்

₹ 125

பக்கம்: 336 "கவிஞன் யானோர் காலக் கணிதம் / கருப்படு பொருளை உருப்பட வைப்பேன் என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல்களை பல கோணங்களில், ஆய்வு செய்து ஏராளமான நூல்கள் வந்த வண்ணமுள்ளன.இந்நூல், கண்ணதாசன் கவிதைகளை, வாழ்வியல் (71 - பாடல்கள்) காதல் (33 - பாடல்கள்) இலக்கியம் (25 - பாடல்கள்) என்னும் மூன்று பகுதிகளுக்குள் உள்ளடக்கி, 129 பாடல்கள் எவ்விதம் உருவாயின, இடம்பெற்றன அவற்றின் பொருள், நயம் இவற்றை நூலாசிரியர் சுருக்கமாக விளக்கியுள்ளார். "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்ற கண்ணதாசனைப் பற்றிய ஏராளமான தகவல்கள் ஏற்கனவே நாம் அறிந்தது தான் என்றாலும், "பழைய கள்ளை புதிய மொந்தையில் (நூலில்) தந்துள்ளார் நூலாசிரியர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை