/ கதைகள் / கடலோடிக் கதைகள்

₹ 250

கடல் வளத்தை மீட்டெடுக்க போராடுவோரின் வாழ்க்கையை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். சுனாமியில் இருந்து கடலோர கிராமங்கள், பவளப் பாறைகள், அலையாத்தி காடுகள் காப்பாற்றப்பட்டதை, ‘பவளப்பாறை’ கதை அழுத்தமாக கூறுகிறது. திமிங்கலத்தின் உடல் அமைப்பும், இறைச்சி, எண்ணெய்க்காக வேட்டையாடப்படுவதை சொல்கிறது. கடல் தீவில் வாழும் முனிவர், விசித்திர தங்க பாம்புகள், பறவைகள், தாவரங்கள் பற்றி கூறி திகிலுாட்டுகிறது. கடல் வழியாக போதை பொருள் கடத்துவதை, ‘தேங்காய் கப்பல்’ கதை எச்சரிக்கையாக சொல்கிறது. கடற்கொள்ளையர், கடல் மாசு, கடல் உயிரினங்கள் அழிப்பு போன்ற செயல்பாடுகளை மையமாக்கி அட்டூழியங்களை தோலுரிக்கிறது. சுவாரசியம் குன்றாத வகையில் உள்ள கதைகளின் தொகுப்பு நுால்.– டி.எஸ்.ராயன்