/ கதைகள் / காலச் சித்தரும் பூமித்தாயும்
காலச் சித்தரும் பூமித்தாயும்
பூமியின் உயிர்ப்பு, ஆற்றல் குறித்து கதை வடிவில் படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். ஐம்பூதங்களாலான பூமியை மையப்படுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. நாவலில் பஞ்ச பூதங்கள் தான் முக்கிய கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் பெயர்கள் தனித்துவமாக இருக்கிறது. காலச்சித்தர் கதாபாத்திரம் வழியாக கால ஓட்டமும், இயற்கையின் ஆற்றலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையை சக்தியாக பார்க்காமல் உணர்வுகளை பகிரும் தோழமையான சித்தரிப்பு புதுமையாக இருக்கிறது. கதை போக்கில் உண்மைகள் வேரூன்றிய சிந்தனை பயணம், புராணம், அறிவியல், தத்துவம், அனுபவம் என விரிகிறது. பூமி மீது ஆழ்ந்த அக்கறையும், நம்பிக்கையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். – ஊஞ்சல் பிரபு




