/ இசை / கலை இலக்கிய சங்கதிகள்
கலை இலக்கிய சங்கதிகள்
படைப்புகள் மீதான விமர்சனங்கள், மதிப்புரைகள், வாசிப்பு சார்ந்த கருத்துகள், ஓவியங்கள், கலைநயங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் அடங்கிய நுால். சிற்றிதழ்களில் வெளியானவை.புகழ்பெற்ற எழுத்தாளர்கள் க.நா.சு., லா.ச.ராமாமிர்தம், அசோகமித்திரன் போன்றோருடனான சந்திப்புகளை விவரித்து, படைப்புத்திறன் மீது பன்னோக்கு பார்வையை தந்துள்ளது. ந.பிச்சமூர்த்தி, எஸ்.வைத்தீஸ்வரன், நாஞ்சில் நாடன், திலகவதி, எம்.வி.வெங்கட்ராம் படைப்புகளில் சிந்தனைகள் அலசப்பட்டுள்ளன. சிறுகதை உலகில் நன்கு அறியப்பட்ட நுால்கள் மீதான விமர்சனங்களும், திறனாய்வுகளும் இடம்பெற்றுள்ளன. நவீன ஓவியங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு