/ வாழ்க்கை வரலாறு / கள்ளர் சரித்திரம்
கள்ளர் சரித்திரம்
கள்ளர் இனத்தைச் சேர்ந்த மக்களின் வரலாற்றை பேசும் நுால். தமிழகத்தில் முக்குலத்தோர் சமூகத்தில் ஒரு பிரிவு என கூறுகிறது. கள்ளர் வரலாறு, பண்பாடு குறித்து விரிவான அறிமுகம் தருகிறது. சமூகத்தின் பொருளாதார, அரசியல் நிலையை விவரிக்கிறது. வாழ்க்கை முறையை உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறது. கல்வி, ஒழுக்கம், பழக்க வழக்கத்தை தெளிவாக எடுத்து சொல்கிறது. கள்ளர் சமூக கட்டமைப்பு, கலாசார செயல்பாடுகள், வரலாற்றில் அரசியல் ரீதியாக எதிர்கொண்ட சவால்கள், வழிபாடு, தற்கால அரசியல் குறித்த விபரங்கள் உள்ளன. கள்ளர் சமூக மக்களின் வரலாற்று நிலையுடன், வழங்கப்பட்டுள்ள பட்டப் பெயர்களின் பட்டியல் முழுமையாக தொகுத்து தரப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வு நுால். -– ஊஞ்சல் பிரபு




