/ கதைகள் / கல்லீரலைத் தானம் செய்த மலர்விழி!
கல்லீரலைத் தானம் செய்த மலர்விழி!
உண்மை நிகழ்வுகளை கருவாக கொண்டு எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். முன்னுரையில் கதைகள் பிறப்பெடுத்தது சுவாரசியம் குன்றாமல் சொல்லப்பட்டுள்ளது. அடித்து துன்புறுத்தும் குடிக்கு அடிமையான கணவனுக்கு உதவும் கதை வித்தியாசமானது. அக்கம் பக்கத்தவர் எதிர்ப்பை மீறி கல்லீரலை கொடுத்து கணவர் உயிரை காத்த பெண்ணின் பண்பை பறைசாற்றுகிறது. கணவரால் பெண் படும் துயரங்கள் கண்களில் நீரை கசிய வைக்கின்றன. பெரும்பாலும் தாம்பத்தியத்தை அடிப்படையாக வைத்து சுற்றி சுழல்கின்றன கதைகள். ஆணவக் கொலை முயற்சியில் இருந்து தப்பித்த ஜோடி ராணுவத்தில் சேர்ந்த கதை அற்புதமாக உள்ளது. தொகுப்பில் ஏழு கதைகளும் ஒவ்வொரு கோணத்தை காட்டுகின்றன. – சீத்தலைச் சாத்தன்




