/ ஆன்மிகம் / கம்பன் படைத்த காண்டங்கள்
கம்பன் படைத்த காண்டங்கள்
கம்ப ராமாயணத்தை அலசி ஆராயும் தொகுப்பு நுால். பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரை, 13 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ராமனின் இளமைக்கால நிகழ்வுகள், விசுவாமித்திரருக்கு உதவும் பொருட்டு பயணம் மேற்கொள்வதை அழகியல் உணர்வோடு படைத்திருப்பது கூறப்பட்டுள்ளது.சித்திரக்கூடம் அழகை வருணிக்கும் பாணியும், அன்பு வெள்ளத்தில் கலந்து குகனோடு ஐவரான ராமனின் பண்பும், குகன் பாத்திர உருவாக்கமும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ராமாயணத்தை படித்த உணர்வு ஏற்படுத்தும் நுால்.– ராம.குருநாதன்