கண தேவதா
காவ்யா, 16, இரண்டாம் குறுக்கு தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24 (பக்கம்:999)ஞானபீட விருதைப் பெற்ற இப்புதினம், 1921 முதல் 1933 வரை, அந்தக் காலக்கட்டத்தில் துண்டிக்கப்படாத வங்களாத்தின் கிராமங்களின் மக்கள் வாழ்க்கை முறையை அவர்களின் உணர்வுகளை வறுமைநிலையை, உழைத்தும் பட்டினியாகக் கிடக்கும் அவலத்தை, உரியை ஆவேசத்தை, உள்ளங்களின் மனப் போராட் டங்களை, இழையோடச் செய்து "ஸ்ரீஹரிகோஷ் போன்ற அற்பமனிதர்களுக்கும், "தேவ்நாத் கோஷ் போன்ற மகாத்மாக்களுக்கும் நடக்கும் தர்மயுத்தத்தில், சூதை தர்மம் வெல்லும் எனும் கருத்தைப் பதிய வைத்துள்ளார் நூலாசிரியர். இந்த நாவலில், முதலில் "சண்டி மண்டபம் என்று பெயரிட்டார். பின்பு, "பஞ்ச கிராம் என்ற இரண்டாம் பகுதி எழுதினார். மீண்டும் இருபகுதிகளையும் சேர்த்து "கணதேவதா (மக்கள் தலைவன் அல்லது மக்களின் தெய்வம்) என்ற பொதுவாகப் பெயரிட்டார்.இந்நூலில், இந்திய சுதந்திரப்போரட்டம், சமூகத்தில் அன்றைய நிலைக்கு எதிரான பழக்க வழக்கங்களுக்கு எதிரான போராட்டம், தேசத்தையே பாதித்த பசிப்பிணியால் விளைந்த போராட்டங்கள் காரணமாக, "கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றம் போன்றவை பாத்திரங்கள் வாயிலான யதார்த்த நடையில் எழுதப் பட்டுள்ளது. "ரஷ்யா தேசத்தின் புரட்சி, இன்று அந்த நாட்டின் நிலை இவற்றை வர்ணித்துவிட்டு