/ கதைகள் / கனவுகளே... கனவுகளே...-

₹ 200

அன்பு, பண்பு, சக மனிதர்களின் உணர்வுகளை உள்வாங்கச் சொல்லும் கிராமிய சூழலை மையமாகக் கொண்ட காதலை சொல்லும் நாவல். பனை மரத்தில் ஏறும்போது விழுந்து கால் முறிந்த கோபால் கதாபாத்திரத்துடன் கதை துவங்குகிறது. மாப்பிள்ளை மரணத்தால், அபூர்வகனி என்ற பெண் திருமணம் நின்றுபோகிறது. அவளை காதலித்த கார்த்திகேயன் என்பவருக்கு திருமணத்தில் நம்பிக்கை பிறக்கிறது. அப்போது கார்த்திகேயனை விரும்பிய தங்கநாயகி என்ற பாத்திரம் குறுக்கே வர, அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்த வாக்கு, இடையூறு செய்கிறது. இதில், யார் காதல் வென்றது என்பதற்கு விடை காண்கிறது. அழகிய கிராம மனிதர்களின் பாசப் பிணைப்பை உணர்த்தும் நுால்.– டி.எஸ்.ராயன்