/ ஆன்மிகம் / கண்டேன், காசியை!
கண்டேன், காசியை!
காசி நகரம் குறித்து, அதன் அத்தனை பரிமாணங்களுடன் விவரிக்கும் பயண நுால். இனிமையான பயணம் போல் துவங்குகிறது. தெளிவான வர்ணனைகள், புள்ளி விபரங்களுடன் காசிக்கு செல்வதைப் போல், கரம் பற்றி அழைத்துச் செல்லும் வார்த்தை ஜாலம் வியக்கச் செய்கிறது. நம்பிக்கையுள்ள கலாசார மரபின் அடையாளத்தை கொண்டுள்ள புனித நகரம் என வெளிப்படுத்துகிறது. ஆன்மிக பயணத்தின் ஊடாக சமூக ஆர்வம், தத்துவங்கள், மர்மம் என, பல்சுவையும் கலந்து விவரிக்கும் பாங்கு, தனித்துவமாக இருக்கிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் குறித்தும் விபரங்கள் தரப்பட்டுள்ளன. புனித நகரம் காசி, சுத்தத்தின் இருப்பிடம் என எடுத்துக்காட்டுடன் கூறுகிறது. பக்கங்கள் வண்ணத்தில் மிளிர்கின்றன. பக்தி பரவசம் ஊட்டும் நுால். – ஊஞ்சல் பிரபு




