/ கதைகள் / கண்களில் கங்கை
கண்களில் கங்கை
நவரசங்களுடன் மிளிரும், 30 சிறுகதைகள் அடங்கிய புத்தகம். பொருத்தமாக ஓவியங்களும் கதைகளுடன் தரப்பட்டுள்ளன. கையால் ஆகாத மகனை வாட்டி எடுக்கும் மருமகளை நிதர்சனமாக காட்டி இருப்பது, கண்களில் கங்கையை வரவழைக்கிறது. வாடகை தாயின் கனிந்த இதயம், கதைகளுக்கு ராணியாக விளங்குகிறது. இப்படி நடக்குமா என்பதை விட இப்படி நடப்பது நல்லது என சொல்வது போதனையாக உள்ளது. ஆங்கில உரையாடல்கள் அதிகம் உள்ளன. சில தலைப்புகளும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ப வெளிச்சம் போடுகிறது. தனக்கு வந்தால் தான் தெரியும் பாவமும் பழியும் என்பது, ‘நல்லவரா கெட்டவரா’ கதையில் தெரிகிறது. அடுத்தவர் பொருளை அபகரிக்கும் வியாதியை படம் பிடிக்கிறது, ‘மயக்கமா கலக்கமா’ கதை. சிந்திக்க வைக்கும் நுால். – சீத்தலைச்சாத்தன்




