/ கட்டுரைகள் / க.ப.அறவாணரின் திறனாய்வுகள்

₹ 150

புதிய தத்துவ அடிப்படையில் படைப்பு களை திறனாய்வு செய்துள்ள கட்டுரை களின் தொகுப்பு நுால். பிற நாட்டு அறிஞர் கருத்துகளை தமிழில் சிறப்புடன் அறிமுகம் செய்கிறது. வளரும் சமுதாயங்களில் உள்ள சிறப்புக்கூறுகளை எடுத்துரைக்கிறது. புத்தகத்தில், 10 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. இலக்கிய படைப்புகளை திறனாய்வு செய்வதில் புதிய அணுகுமுறையில் அமைந்த நவீன போக்குகளை அறிமுகம் செய்கிறது. மொழி நடையில் சிறப்புகளை அறிய வைக்கிறது. திருக்குறள் கருத்துகள் சார்ந்து திறன்மிக்க விமர்சனத்தை முன்வைக்கிறது. சீனாவில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி போக்கை, நவீனத்தின் வெளிப்பாட்டை அறிய வைக்கிறது. திறனாய்வு மற்றும் வளர்ச்சிக்கு புதுமைகளை அறிமுகம் செய்யும் நுால். – மதி


சமீபத்திய செய்தி