/ ஆன்மிகம் / கர்மா

₹ 800

ஆழ்மன சக்தி, வாழ்வு தேடல்களை முன்வைத்துள்ள படைப்பு நுால். தேசிய செஸ் சாம்பியன் தகுதி பெற்ற கதையின் நாயகனுக்கு அடிக்கடி கனவுகள் வருகின்றன. அது ஒரு மனிதனின் மரணக்காட்சியாக உள்ளது. அது இயற்கை மரணம் அல்ல என்பதும் தெரிய வருகிறது. அது முற்பிறவியால் நிகழ்வதாக இருக்கலாம் என எண்ணுகிறான். அதை குடும்பத்தில் அடையாளம் காண முயல்கிறான். கதாநாயகனுக்கும், அந்த மரணத்துக்கும் என்ன தொடர்பு என்பதை பற்றி விவரிக்கிறது நாவல். சுவாரசியமாக படிக்கும் வகையிலான நடையில் அமைந்துள்ளது. நீண்ட விவரிப்புகளுடன் உள்ளது. சிறு கதைக்குரிய நேர்த்தி ஒவ்வொரு அத்தியாயத்திலும் தெரிகிறது. கொலை, திகில், மர்மம், புலனாய்வு என தடங்கலின்றி ஓட்டம் அமைந்துள்ள நாவல் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை