/ தமிழ்மொழி / கற்போம் எளிய தமிழ்!

₹ 250

தொடக்க நிலை கல்வி பயில்வோர் பிஞ்சு நெஞ்சத்தில் பதியம் போடும் வகையில் தமிழை எளிய முறையில் கற்பிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள நுால். தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் எழுத்துகளை அன்றாடம் பயன்பாட்டில் உள்ள சொற்கள் மீது காட்டி பதிய வைக்கிறது. அகர வரிசையில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்து சொற்கள் என சந்த நயம் மிக்க சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு உள்ளது. இரண்டு சொற்களை கொண்ட சிற்றொடர்களும், 216 உயிர் மெய் எழுத்துகளை அடையாளம் காட்டும் கவிதையும் இடம் பெற்றுள்ளன. எளிதில் எழுத்துகளை அடையாளம் கண்டு உச்சரிக்கும் வகையில் மொழி வளப்பயிற்சி பக்கங்களும் உள்ளன. வழக்கில் உள்ள பழமொழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் எளிதில் தமிழ் கற்க உதவும் நுால். -– புலவர் சு.மதியழகன்


புதிய வீடியோ