கருணை விழியாள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி
கருணை தெய்வமான காஞ்சி காமாட்சியம்மன் அருளையும், சிறப்பு களையும் எடுத்துரைக்கும் நுால். காஞ்சிபுரம் என்றதும் அடுத்த வினாடியே நினைவுக்கு வருவது, அங்கு கோவில் கொண்டுள்ள அன்னை காமாட்சி தான். அம்பாளின் கோவிலுக்குள் தான் எத்தனை எத்தனை அதிசயங்கள்... எத்தனை எத்தனை ரகசியங்கள்... அத்தனையையும் தெரிந்து வழிபட்டால் எவ்வளவு பெரிய பரவசத்தை ஏற்படுத்தும் என்பதை எடுத்துரைக்கிறது. அன்னையாக வீற்றிருக்கும் காமாட்சி எப்படி அவதரித்தாள். அவளது அருமை பெருமை, அம்பாள் சன்னிதியில் இருக்கும் பிலாஹாசம் என்ற அதிசயம், அரூப லட்சுமி பற்றி விளக்கப் பட்டுள்ளது. சாஸ்தாவின் அற்புத வரலாறும் தரப்பட்டு உள்ளது. காஞ்சி மண்ணில் அருளிய வாழும் தெய்வம் காஞ்சி மகா பெரியவர் பற்றிய அபூர்வ தகவல்கள் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இந்த புத்தகத்தை வாசித்து விட்டு காஞ்சிபுரம் சென்றால், அணு அணுவாக காமாட்சி அம்மன் கோவிலை தரிசனம் செய்து வரலாம். அம்பாள் சன்னிதி முன் அமர்ந்து, இந்த புத்தகத்தில் இணைக்கப் பட்டுள்ள காமாட்சி அம்மன் ஸ்தோத்திரங்களை பரவசத்துடன் படித்து அருள் பெறலாம். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அருமையாக வழிகாட்டும் அற்புத நுால். – தி.செல்லப்பா




