/ கதைகள் / கறுப்பு ரட்சகன்
கறுப்பு ரட்சகன்
குழந்தையை பிரசவித்ததும் ஏழைப் பெண் இறந்துவிட, கணவன் எடுக்கும் முடிவுகளால் வரும் மாற்றங்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். சுதந்திரம் பெறுவதற்கு முன் துவங்குகிறது கதை. பாதிரியார் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தாயற்ற குழந்தை மீது பாதிரியாருக்கு ஏற்படும் பரிவும், இரக்கமும், குழந்தையின் முதிர்ந்த மனமும் திரைக்கதை போல விவரிக்கப்பட்டுள்ளது. சிக்கல்களை தாண்டி மனித உரிமைக்காக பாடுபடுவது இதமூட்டுகிறது. கடின வாழ்க்கை சூழலிலும் கல்வியால் சிறப்பது, பாடம் கற்று தருகிறது. மனிதநேயமே நன்மை தரும் என வலியுறுத்துகிறது. தனிநபர் ஒழுக்கம், பேதமற்ற அணுகுறை, நல்லிணக்கத்தை நெகிழ்ச்சியோடு எடுத்துக்காட்டும் நாவல். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




