/ சிறுவர்கள் பகுதி / கர்வம் பிடித்த பூசணிக்காய்

₹ 130

தனித்துவமான நடையில் அமைந்து உள்ள சிறுவர்களுக்கான கதை தொகுப்பு நுால். மொத்தம் 10 கதைகள் அழகிய படங்களுடன் இடம் பெற்றுள்ளன. பெரியோர் சொல் கேள் என்ற கருத்தை மீன்களை கதாபாத்திரமாக்கி வலியுறுத்தி சொல்கிறது ‘தொட்டியில் இருந்து குதித்த மீன்கள்’ என்ற கதை. தாவரத்திற்கும் உணர்வு இருப்பது போல், பொருட்களுக்கும் உணர்வு இருப்பதாக கற்பனையை விரிக்கிறது ‘நாற்காலியில் பேய்’ கதை. கொலு வைக்கும் முறை, நடன பொம்மை குறும்புகளை சுவையாக விவரிக்கிறது, ‘கர்ஜிக்காத சிங்கம்’ கதை. பொம்மை பேசுவது சுவையூட்டுகிறது. அகங்காரம் கூடாது என விளக்கும் ‘கர்வம் பிடித்த பூசணிக்காய்’ கதை பெரியவர்களும் படிக்க வேண்டியது. இனிமை நிறைந்த கதைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை