/ கவிதைகள் / காதலாகிக் கசிந்து...
காதலாகிக் கசிந்து...
ஆங்கிலத்தில் முதல் பெண் கவிஞர் எலிசபெத் பாரட் பிரவுனிங்கின் உணர்ச்சி ததும்பும் கவிதைகளின் தமிழாக்க நுால். ஆங்கில மொழியில் எழுதிய கவிஞர்கள் பட்டியலில் தனி இடம் பிடித்தவர். கணவரை கடவுளாக எண்ணி காதல் கவிதைகள் புனைந்து வெளியிட்டவர். கண்ணீரும், கவலையும் நிறைந்த வாழ்வை மாற்றியமைக்கும் விதமாக எழுதிய சானட் வகை கவிதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆங்கிலத்தில் 14 அடிகளை உடைய செய்யுள்கள் கருத்து, அடி பிசகாது அமைக்கப்பட்டுள்ளன. கவிதைகள் தமிழிலேயே எழுதப்பட்டது போன்று எண்ணத் தோன்றுகிறது. வனப்பு கெடாது இனிய சொற்களால் படைக்கப்பட்டு இருக்கிறது. காதலாகி கசிந்து உருகி வசீகரமாக்கி பளிச்சிடும் கவிதை நுால். – ஊஞ்சல் பிரபு




