/ கதைகள் / காத்திருக்க நேரமில்லை
காத்திருக்க நேரமில்லை
குடும்பம், கடத்தல், சஸ்பென்ஸ் என விரியும் சுவாரஸ்யமிக்க நாவல் நுால்.குடும்ப சூழ்நிலை காரணமாக கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறான் ஒருவன். பணி இடத்தில் பெண்களை முதலாளியிடம் இருந்து காப்பாற்றுகிறான். அது இழப்புகளை ஏற்படுத்துகிறது. இறுதியில் முதலாளிக்கும், பெண்களுக்குமான தொடர்பு, கடத்தல் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மம் என 13 அத்தியாயங்களில் விரிகிறது.குடும்பச் சூழல், கடத்தல் சாகசங்கள் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அடுத்தது என்ன என்ற ஆவலை ஏற்படுத்துகிறது. திருப்பங்களுடன் உள்ளது. சிறு பத்திகளாக பிரிக்கப்பட்டு, மென் வசனங்களுடன் நகர்கிறது. தங்கம் கடத்த நடத்தப்படும் யுக்தி பகீரென்று இருக்கிறது. பரபரப்பான நடையில் உள்ள நாவல்.– ஊஞ்சல் பிரபு